அதிமுக பிரமுகர் உறவினர் வீட்டில் காவல்துறை சோதனை

583பார்த்தது
செய்யூர் அருகே மயிலாடுதுறை ஆதினத்தை மிரட்டியதாக வழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயச்சந்திரன் உறவினர் வீட்டில் காவல்துறை சோதனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை ஆதினத்தை ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மிரட்டிய வழக்கில் 9 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஒரு சில நபர்களை கைது செய்தனர்.

இதில் செய்யூரில் வசித்து வந்த அதிமுக நிர்வாகி செங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பிரிவு ஜெயச்சந்திரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கு சம்பந்தமாக மயிலாடுதுறை காவல்துறையினர், மற்றும் குற்ற நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் இன்று அவரது தம்பி பரத் குமார் மற்றும் தகப்பனார் குணசேகர் வீட்டில் சோதனை செய்தனர்.
ஐந்து மணி வரை நடைபெற்ற சோதனையில் எந்த ஒரு ஆவணமும் பணமும் கிடைக்காததால் காவல்துறையினர் திரும்பிச் சென்றனர் இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி