தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து

57பார்த்தது
மேல்மருவத்தூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக 5 கார், ஒரு சொகுசு பேருந்து மோதல் பத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயம், போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுநாகலூர் என்ற இடத்தில் 5 கார், ஒரு சொகுசுப் பேருந்து ஒன்றன்பின் ஒன்றாக மோதியதில் ஐந்து காரில் பயணம் செய்தவர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் லேசான காயம் அடைந்தனர். பின்னர், மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேல்மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி