கள்ளக்குறிச்சி எஸ்பி அதிரடி..வீடியோ!

2235பார்த்தது
கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் அழித்தனர்.

கள்ளக்குறிச்சி எஸ். பி. , சமய்சிங் மீனா உத்தரவின்பேரில், கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் கல்வராயன்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, விளாம்பட்டி கிராமத்தில் உள்ள மேற்குமலை பகுதியில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் புளித்த சாராய ஊறல் இருந்தது தெரிந்தது.

தொடர்ந்து, 3 பேரல்களில் இருந்த 600 லிட்டர் சாராய ஊறலை சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி