போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு

81பார்த்தது
கல்வராயன்மலை பகுதியில் பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை.

கள்ளக்குறிச்சிமாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி உத்தரவுப்படி கல்வராயன்மலை பகுதிகளில் கரியாலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணிகண்டன் தலைமையில் காவலர்கள் மற்றும் சிறப்பு படையினர் இணைந்து அருவங்காடு, ஈச்சங்காடு, கீழாத்துகுழி மற்றும் மணியார்பாளையம் ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமைகள் மற்றும் போதை பழக்கத்தினால் சமூகத்திற்கு ஏற்படும் தீமைகள் குறித்தும், போதையில்லா கிராமத்தை உருவாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் சிறு, குறு தொழில் தொடங்குவதற்கான ஆலோசனைகள் மற்றும் அதற்கு அரசால் வழங்கப்படும் நிதி உதவிகள் குறித்தும் துண்டுபிரசுரம் வழங்கப்பட்டது.

மேற்கண்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி