முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது

79பார்த்தது
முன்விரோத தகராறில் முதியவரை தாக்கியவர் கைது
கச்சிராயபாளையம் அடுத்த கரடிசித்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் அண்ணாமலை, 68; அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயன் மகன் ஆறுமுகம், 33; இருவருக்குமிடையே முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று காலை 6: 00 மணியளவில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆறுமுகம் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் சேர்ந்து தாக்கியதில் அண்ணாமலை காயமடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் கவுரி, சுப்புராயன் உட்பட 3 பேர் மீது கச்சிராயபாளையம் வழக்குப் பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி