சின்னசேலத்தல், தமிழ் சங்கம் சார்பில் இலக்கிய விழா நடந்தது.

71பார்த்தது
சின்னசேலத்தல், தமிழ் சங்கம் சார்பில் இலக்கிய விழா நடந்தது.
சின்னசேலத்தல், தமிழ் சங்கம் சார்பில் இலக்கிய விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு, சின்னசேலம் சிறப்பு நிலை பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கத் தலைவர் கவிதை தம்பி முன்னிலை வகித்தார். கவிஞர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். கிராமத்தின் ஒளி பவுண்டேஷன் நிறுவனர் சக்திகிரி, திருவண்ணாமலை மாவட்ட தமிழ் சங்கத் தலைவர் இந்திரராஜன், விழுப்புரம் பொதுமறை தமிழ்ச் சங்கத் தலைவர் கலியன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று பேசினர். கவிஞர்கள் தங்கராஜ், அம்பேத்கர், இதயம் கிருஷ்ணா, சத்தியநாராயணன், ரத்தினவேலு, நாகராஜன், வெற்றிவேல் சிறப்புரையாற்றினர். கவிஞர்கள் ஆராவமுதன், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி