ரிஷிவந்தியம் அருகே மகள் மாயம் தாய் புகார்

61பார்த்தது
ரிஷிவந்தியம் அருகே மகள் மாயம் தாய் புகார்
ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் மகள் தனலட்சுமி, 17; ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற தனலட்சுமி மாலை நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தனலட்சுமியை தேடினர். எங்கு தேடியும் கிடைக்க வில்லை.

தாய் செல்வாம்பாள் புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி