குடிநீர் பிரச்சனையால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

67பார்த்தது
குடிநீர் பிரச்சனையால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
புக்கிரவாரி கிராமத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த புக்கிரவாரி கிராமத்தில் ஆங்காங்கே சில இடங்களில் குடிநீர் பைப் லைனில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை 8 மணியளவில் புக்கிவரவாரி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே அவ்வழியாக சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூறி, குடிநீர் பைப் லைன் சீரமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தையடுத்து 8. 30 மணியளவில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்தி