காரில் மறைத்து கடத்தி வரப்பட்ட சாராயம் பறிமுதல்

1906பார்த்தது
காரில் மறைத்து கடத்தி வரப்பட்ட சாராயம் பறிமுதல்
காரின் எஞ்சின் பகுதியில் சாராயத்தை மறைத்து வைத்து கடத்திய நபரை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா, உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையில் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்ட போது கொங்கராபாளையம் கிராமம் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த காரை விரட்டிச் சென்று நிறுத்தி சோதனை செய்த போது கல்வராயன்மலை வட்டம், எருக்கம்பட்டு கிரமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகன் சரவணன்(27) என்பவர் காரின் எஞ்சின் பகுதியில் 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி டியூப்களில் சுமார் 120 லிட்டர் சாராயத்தை விற்பனைக்காக மறைத்து கடந்திச் சென்றவரை கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் சாராயம் பறிமுதல் செய்து விசாரணைக்கு பின் குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி