தியாகதுருவத்தில் அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு

77பார்த்தது
தியாகதுருவத்தில் அதிமுக வேட்பாளர் ஓட்டு சேகரிப்பு
தியாகதுருகம் ஒன்றிய கிராமங்களில் அ. தி. மு. க. , வேட்பாளர் திறந்த வேனில் சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தியாகதுருகம் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தில் அ. தி. மு. க. , வேட்பாளர் குமரகுரு தீவிரமாக ஓட்டு சேகரித்தார். அப்போது சித்தலுார், பானையங்கால், குடியநல்லுார், தியாகை, நாகலுார், கண்டாச்சிமங்கலம், விருகாவூர், ஈய்யனுார், அசகளத்துார், சின்னமாம்பட்டு, திம்மலை உட்பட பல்வேறு கிராமங்களில் பெண்கள் பலர் ஆரத்தி எடுத்து, மலர்துாவி சிறப்பான வரவேற்பு அளித்தனர். எம். எல். ஏ. , செந்தில்குமார், முன்னாள் எம். எல். ஏ. , பிரபு, ஒன்றிய செயலாளர்கள் அய்யப்பா, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்புடைய செய்தி