சிற்றுண்டி உணவான மேகி உடனடி நூடுல்ஸை விற்பனை செய்யும் நெஸ்லேவின் மிகப்பெரிய சந்தைகளில் இந்தியாவும் ஒன்றாகும். உள்நாட்டில் நூடுல்ஸ், குழந்தை உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது. இருப்பினும், மேகி நூடுல்ஸ் விஷயத்தில், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது, நம் நாடு மிகப்பெரிய சந்தை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. நெஸ்லே தயாரித்த பொருட்களின் விற்பனையில் இது இரண்டாவது பெரிய சந்தை என்று கூறப்பட்டுள்ளது.