ரத்த நாள வீக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ள சூப்பர் ரஜினிகாந்த், இன்னும் இரு தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமலஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் எனது அருமை நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் பூரண நலமடைய விழைகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.