ஓடும் ரயிலில் வழிப்பறி.. புள்ளிங்கோ அட்டகாசம்

60பார்த்தது
ஓடும் ரயிலில் வழிப்பறி.. புள்ளிங்கோ அட்டகாசம்
கடந்த டிசம்பர் 29-ம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து, செங்கல்பட்டு நோக்கி பயணம் செய்த மின்சார ரயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கி ஒருவர் செல்போன், பணம், நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இந்த விஷயம் தொடர்பாக பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து செயலில் ஈடுபட்டவர் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி