பல்கலைக்கழகங்களில் இனி ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி அளித்துள்ளது. ஜனவரி - பிப்ரவரி, ஜூலை - ஆகஸ்ட் என இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், உயர்கல்விகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.