ஆப்கானிஸ்தானில் கனமழை பேரழிவை உருவாக்கியுள்ளது. கனமழைக்கு இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. நங்கர்ஹர் மாகாணத்தில் கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மறுபுறம், கனமழையால் பெரும் சொத்து சேதம் ஏற்பட்டுள்ளது. பயிர்களும் சேதமடைந்தன. குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ள நீர் புகுந்து காணும் திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.