காவி உடையுடன் பூசாரிகள் வேடத்தில் காவலர்கள்

51பார்த்தது
காவி உடையுடன் பூசாரிகள் வேடத்தில் காவலர்கள்
இந்தியாவின் பிரபல வழிபாட்டு தலங்களில் ஒன்றாக உள்ளது காசி விஸ்வநாதர் கோயில். இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளை சேர்ந்தவர்களும் இங்கு வருவது வழக்கம். இந்தச் சூழலில், இக்கோயிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியை கவனித்து வரும் காவலர்கள், பக்தர்கள் - பூசாரிகளை போல காவி உடை அணிந்து பணியாற்றி வருகின்றனர். இது குறித்து வாரணாசி காவல் ஆணையர் மோகித் அகர்வால் கூறும்போது, காவலர்கள் தங்களை வலுக்கட்டாயமாக தள்ளுகிறார்கள் என்ற குற்றசாட்டு எழுகிறது. எனவே கருவறைக்கு அருகே இருக்கும் காவலர்கள் பூசாரிகளை போல் உடை அணிந்து வேலை செய்கிறார்கள் என கூறியுள்ளார். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி