திருப்பூர் பஸ் நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு 50 பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று நேற்று(செப்.26) இரவு புறப்பட்டுச் சென்றது. இந்த பஸ் இரவு 10:30 மணி அளவில் தாராபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவர் இருக்கை அருகே திடீரென்று புகை வந்தது. இதைப் பார்த்த டிரைவர் உடனே பஸ்சை சாலையோரம் நிறுத்தியபோது பஸ் தீப்பிடித்து எரிந்ததால், பயணிகளை அவர் கீழே இறக்கிவிட்டார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.