தாளவாடி: காட்டுக்குள் கட்டிப்போட்டு கொலை முயற்சி... கள்ளக்காதலிக்கு வலை

73பார்த்தது
தாளவாடி வனப்பகுதியில் ஊராட்சி செயலாளரை கொல்ல முயற்சித்த பெண் உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரை கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் ஆரியூர் பஞ்சாயத்தில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அன்னபூரணி என்பவருடன் திருமண நடைபெற்று 16 வயதில் மகன் உள்ளார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே சரவணனுக்கு ஜெயகாளியம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் பழகி வந்துள்ளனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் சரவணன் 2003ஆம் ஆண்டு பணியில் இருந்து தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் டிரைவர் வேலைக்குச் சென்று வந்துள்ளார். அப்போது தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுக்காவைச் சேர்ந்த பால்பாண்டியன் என்பவர் சரவணன், ஜெயகாளியம்மாள் ஆகிய இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்துள்ளார்.

இதனிடையே ஜெயகாளியம்மாள் சரவணனை விட்டு பிரிந்து சென்று வேறொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இது சம்பந்தமாக கடந்த 07.07.2024-ம் தேதி பால்பாண்டியனுக்கு போன் செய்து ஜெயகாளியம்மாவை தன்னுடன் சேர்த்து வாழ வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு பால்பாண்டி கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரில் இருப்பதாக கூறி அங்கு வர சொல்லியுள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம்(08.07.2024) சரவணன் சாம்ராஜ்நகருக்கு சென்றுள்ளார்.

பின்னர் பால்பாண்டி தாளவாடி அருகே உள்ள சிக்க ஹள்ளியைச் சேர்ந்த கங்கப்பா (60) என்பவரின் தோட்டத்திற்கு போகலாம் என கூறிவிட்டு சிக்க ஹள்ளி வனப்பகுதிக்குள் அழைத்துச் சென்று மரக்கட்டையால் சரவணனை தாக்கியுள்ளார். இதில் கீழே விழந்த சரவனைன கம்பியால் கட்டி வைத்துள்ளார். பின் சரவணனிடம் ஜெயகாளியம்மாள் சொல்லி தான் உன்னை அடித்து கட்டிப்போட்டு உள்ளோம். வந்தவுடன் அவள் முன்பே உன்னை அடித்துக் கொலை செய்து இங்கேயே புதைத்து விடுவோம் எனக் கூறிவிட்டு அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர்.

உடனே சரவணன் காலில் இருந்த கம்பி கட்டை கழற்றி விட்டு அங்கிருந்து அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த ரமேஷ் என்பவரிடம் நடந்த விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக தாளவாடி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்று எஸ்.ஐ பிரபாகரன் மற்றும் எஸ்.எஸ்.ஜ அரிச்சந்திரன் ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எதிரே வந்த பால்பாண்டியையும், கங்கப்பாவையும் தாளவாடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஜெயகாளியம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி