தாளவாடியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்புக் கூட்டம்
ஈரோடு மாவட்டம் தாளவாடியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய செயல் தலைவர் தோழர் நம்புராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார். இதில் தாளவாடி தாலுக்கா நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக ராயப்பன் செயலாளராக ஏபி ராஜு பொருளாளர் குப்புத்தாயம்மா மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளுடைய கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.