2000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன

80பார்த்தது
ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே தொட்டமுதுகரை,
பனஹள்ளி உள்ளிட்ட கிராமங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்தது. 2000 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளான தொட்டமுதுகரை,
பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது.
இதில் தொட்டமுதுகரை கிராமத்தில் கிஷர் அகமது (43) என்பவருக்கு சொந்தமான வாழை தோட்டத்தில் இருந்த 2000க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. மேலும் அருகில் இருந்த தோட்டங்களிலும் வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன. அறுவடைக்கு சில நாட்களே இருந்த நிலையில் 2000 வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்ததால் 5 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி