குன்னத்தூரில் அரசுப்பள்ளியில் இங்கிலீஷ் மீடியம் துவக்கம்.

55பார்த்தது
குன்னத்தூரில் அரசுப்பள்ளியில் இங்கிலீஷ் மீடியம் துவக்கம்.
குன்னத்தூர் அருகே உள்ள கருமஞ்சிறை அரசு துவக்கப் பள்ளியில் இங்கிலீஷ் மீடியம் துவக்கத்தை தொடர்ந்து புதிதாக சேர்ந்த பள்ளி குழந்தைகளை மேளம், தாளம், மாலை, மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று ஆசிரியர்கள்  வரவேற்பு அளித்தனர்.

ஊத்துக்குளி  யூனியனுக்குட்பட்ட குன்னத்தூர் அருகே உள்ள கருமஞ்சிறை அரசு துவக்கபள்ளியில் 2024-2025 கல்வியாண்டில் கோடை விடுமுறை முடிந்து , பள்ளிகள் திறப்பு மற்றும் இங்கிலீஷ் மீடியம் துவக்கம் நடைபெற்றது. புதிதாக சேர்ந்த பள்ளி குழந்தைகளை மாலை, மரியாதையுடன், மேளதாளத்துடன் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு பெற்றோர்களை பெரிதும் கவர்ந்தது. நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷியாம்சுந்தர், ஆசிரியர்கள் , பள்ளி மேலாண்மை குழு பொறுப்பாளர்கள், பி டி ஏ பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you