சென்னிமலையில் 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

544பார்த்தது
சென்னிமலையில் 4 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
சென்னிமலை வட்டாரத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என சென்னிமலை உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் மற்றும் காவல்துறை துறையினர் இணைந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 5 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு 4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் போலீசார் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல் நடவடிக்கையாக இந்த 5 கடைகளும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் கீழ் உணவு பாதுகாப்பு துறையின் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
மேலும் அந்த கடைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டு ஒவ்வொரு கடைக்கும் தலா ரூபாய் 25 ஆயிரம் வீதம் மொத்தம் 1 லட்சத்து 25 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இனி தொடர்ந்து காவல்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அரசு உத்தரவை மீறி தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. பொதுமக்கள் உணவு சார்ந்த புகார்களுக்கு 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என சென்னிமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி