ஈரோடு கருப்பண்ணசுவாமி கோவிலில் திருப்பணி மேற்கொள்வதற்காக பாலாலயம் விழா நேற்று நடந்தது.
ஈரோடு பெரியார் நகரில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், கருப்பண்ணசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், மகாமுனி, புற்று மாரியம்மன், விநாயகர் ஆகிய சன்னதிகளும் உள்ளன.
இக்கோவிலில், திருப்பணி துவக்குவதற்கான முதற்கட்ட பணியான பாலாலயத்திற்கான மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி, கலாகர்ஷணம், நாடி சந்தானம், மஹா பூர்ணாஹூதி உள்ளிட்டவை நேற்று நடந்தன.
கோவில் செயல் அலுவலர் திலகவதி தலைமையில் நடந்த இவ்விழாவில், அமைச்சர் முத்துசாமி, பிரகாஷ் எம். பி, 45வது வார்டு தி. மு. க. , கவுன்சிலர் பிரவீனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இப்ப பணிகளை ஒரு ஆண்டுக்குள் முடித்து மகா கும்பாபிஷேகம் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்தது.