கொங்கு கல்வி நிலைய +1 மாணவர்களுக்கு பாராட்டு

66பார்த்தது
கொங்கு கல்வி நிலைய +1 மாணவர்களுக்கு பாராட்டு
ஈரோடு
பிளஸ் 1 தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஈரோடு, ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் பன்ளி மாணவ, மாணவியருக்கு பள்ளிநிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ. மாணவியர் பிளஸ் 1 தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இப்பள்ளி எம். என். ரஞ்சித் மாணவர் 595 மதிப்பெண்ணும், பி. பிரனேஷ் 589 மதிப்பெண்ணும். எஸ். தனுஷ்கா 588 மதிப்பெண்ணும் பெற்று

சிறப்பிடம் பெற்றுள்ளனர். இப்பள்ளி மாணவர்களில் கணினி அறிவியல் பாடத்தில் 23 பேரும். கணிதத்தில் 4 பேரும். வேதியியலில் 3 பேரும், வணிகவியலில் 3 பேரும். கணினி பயன்பாடுகள் மற்றும்

பொருளியலில் தலா இருவரும். இயற்பியல், கணக்குப்பதிவியல். வணிக கணிதம் ஆகிய பாடங்களில் தலா ஒருவரும் நூறு சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பிளஸ் 1 தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்கள் மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் ஆகியோருக்கு கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தலைவர் எம். சின்னசாமி, தாளாளர். கே. செல்வராஜ், பொருளாளர் ஆர். குணசேகரன். உதவித்தலைவர்கள் எஸ். கே. சோமசுந்தரம் மற்றும் ஆர். எம். தெய்வசிகாமணி. உதவி செயலாளர் மு. மீனாட்சிசுந்தரம். உதவி பொருளாளர் வி. நாகராஜ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள். முதல்வர் டி. நதியா அரவிந்தன் ஆகியோர் கேடயம் வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி