ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம்

981பார்த்தது
ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா-பாட்டி தினம்
ஈரோடு கேட்டு புதூரில் உள்ள ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளியில் தாத்தா, பாட்டி தினம் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக பள்ளியின் நிறுவன தலைவர் செந்தில்குமார், பள்ளியின் செயலாளர் ராதா செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவ-மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனா். தாத்தா, பாட்டிகளை வாழ்த்தி மாணவர்கள் மும்மொழியிலும்(தமிழ், ஆங்கிலம், இந்தி) பேசினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், தாத்தா பாட்டிகளுக்கு உள் அரங்கு, வெளியரங்கு விளையாட்டு போட்டிகளும் நடந்தது. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பேரக்குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் தாத்தா, பாட்டிகளின் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் முதல்வர் சங்கர் செய்திருந்தார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி