பெருந்துறை அருகே வேன் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி.

80பார்த்தது
பெருந்துறை அருகே வேன் சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி.
பெருந்துறை அருகே ஸ்கூட்டரில் சென்றபெண் வேன் மோதிய விபத்தில் பரிதாபமாக இறந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர், சேரன் நகரை சேர்ந்தவர் தங்கவேல் (67). பனியன் கம்பெனி தொழிலாளி. இவருடைய மனைவி பவளக்கொடி (62). இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் பெருந் துறையில் இருந்து திருப்பூருக்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். பெருந்துறையை அடுத்த சரளை மேடு அருகே சென்றபோது, ஸ்கூட்டரின் பின்புறத்தில் அந்த வழியாக வந்த வேன் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பவளக்கொடி வேனின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். தங்கவேல் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி