ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி விலை 2 மடங்கு உயர்ந்தது

78பார்த்தது
ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் தக்காளி விலை 2 மடங்கு உயர்ந்தது
ஈரோடு வ உ சி காய்கறி மார்க்கெட்டுக்கு ஈரோடு மாவட்டத்தின் தாளவாடி மற்றும் பிற பகுதிகளான தர்மபுரி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தக்காளி வரத்து குறைவின்றி இருந்ததால் சில்லரை விலையில் கிலோ ரூ. 20 முதல் ரூ. 30 வரை விற்பனையாகி வந்தது.

தொடர்ந்து படிப்படியாக வரத்து குறைந்ததை அடுத்து கடந்த வாரத்தில் கிலோ ரூ. 30 முதல் ரூ. 40 வரை விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தக்காளி வரத்து முற்றிலும் குறைந்ததை அடுத்த ஈரோடு வ உ சி காய்கறி மார்க்கெட்டிற்கு கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்தது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 8, 000 பெட்டி தக்காளிகள் ஈரோடு மார்க்கெட்டுக்கு வரும் நிலையில் இன்று 2, 000 தக்காளி பெட்டிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன.

இதன் காரணமாக தக்காளி விலை இரு மடங்காக உயர்ந்தது. அதன்படி கடந்த வாரங்களில் ரூ. 350 எனும் அளவில் விற்பனையான 15 கிலோ சிறிய பெட்டி தக்காளி, இன்று ரூ. 750 -க்கு விற்பனையானது. அதேபோல, 30 கிலோ பெட்டி கடந்த வாரங்களில் ரூ. 750 க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று அதன் விலை ரூ. 1, 500-ஐ எட்டியது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சில்லறை விலையில் கிலோ ரூ. 40 வரை விற்பனையான தக்காளி இன்று ரூ. 60 முதல் 70 வரை விலை உயர்ந்து விற்பனையானது.

தொடர்புடைய செய்தி