பெருந்துறை அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை, ராமலிங்கபுரம், பாலக்காட்டுபுதூரை சேர்ந்தவர் கருப்புசாமி. என்பவரது மகன் கவுதம் (23). இவர் சென்னிமலையில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கவுதம் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனை கருப்புசாமி தட்டி கேட்டுள்ளார். இதனால் அவரிடம் கவுதம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கருப்புசாமி ஆடு மேய்க்க சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த கவுதம் கயிற்றில் தூக்குப் போட்டு கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு கவுதம் ஏற்க னவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.