ஆளுநர் மாளிகைக்கு வண்டியை விடும் இபிஎஸ்

52பார்த்தது
ஆளுநர் மாளிகைக்கு வண்டியை விடும் இபிஎஸ்
தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசுக்கு எதிராக இன்று மாலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அத்துடன் தமிழ்நாட்டில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் மனித சங்கில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். ஆளுநரை சந்திக்கும் அவர், போதை பொருள் வழக்கில் தொடர்புடைய ஜாபர் சாதிக், ஜாபர் சாதிக்குக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்து முழுமையான சுதந்திரமான நீதி விசாரணை வேண்டும் என வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி