ஆசியாவிலேயே தூய்மையான கிராமமாக மேகாலயாவில் உள்ள மயிலின்னாங் மாறியுள்ளது. இந்த ஊரில் மொத்தம் 500 பேர் வசிக்கின்றனர். அவர்களே தங்கள் கிராமத்தை சுத்தம் செய்கிறார்கள். மேலும், இங்குள்ள மக்கள் இயற்கை மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். எந்த ஒரு சிறிய தவறுக்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. இந்த கிராமத்தில் பிளாஸ்டிக் மற்றும் புகை பிடிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.