மக்களவை தேர்தலில் கோவை தொகுதி தனி கவனத்தை பெற்றது. இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட கணபதி ராஜ்குமார் வாக்கு எண்ணிக்கை முடிவில் 5,68,200 வாக்குகள் பெற்று அபார வெற்றிப் பெற்றுள்ளார். இரண்டாமிடத்தை பிடித்த அண்ணாமலை 4,50,132 வாக்குகளும், மூன்றாமிடத்தை பிடித்த அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகளும் பெற்றனர். அதன்படி அண்ணாமலை 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியை சந்தித்துள்ளார்.