பாஜகவினரால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளித்த திமுக எம்.எல்.ஏ.,

68பார்த்தது
பாஜகவினரால் தாக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவளித்த திமுக எம்.எல்.ஏ.,
திருப்பூரில் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை பாஜகவினர் தாக்கியுள்ள நிலையில், அந்தப் பெண்ணுக்கு ஆதரவளிக்கும் விதமாக திருப்பூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் நேரில் சென்று சந்தித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், தரங்கெட்ட அரசியலால் தமிழ்நாட்டை சீரழிக்கும் பாசிச பாஜக-வின் மற்றொரு கீழ்த்தரமான சம்பவமாக, திருப்பூர் மாவட்டம் ஆத்துப்பாளையம் பகுதியில் வசிக்கும் பெண்மணியின் GST குறித்த கேள்விக்கு பதில் கூற வக்கில்லாமல் பாஜக-வினர் வன்முறையில் ஈடுபட்டதை அறிந்து, உடனடியாக அப்பெண்ணிற்கு துணைநிற்கும் விதமாக அவரிடம் நேரில் சென்று சம்பவத்தை கேட்டறிந்தது மட்டுமல்லாமல்,‌ எதற்கும் அச்சப்படாமல் பாசிச சக்திகளுக்கு எதிராக எதிர்த்து நின்ற அப்பெண்ணின் தைரியத்திற்கு பாராட்டு தெரிவித்தேன். பாசிசத்தை ஒழிப்போம், பாஜக-வை விரட்டுவோம் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி