தேமுதிக கூட்டணி - ஓரிரு நாளில் அறிவிப்பு

104145பார்த்தது
தேமுதிக கூட்டணி - ஓரிரு நாளில் அறிவிப்பு
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் இன்று காலை முதல் நாளை மாலை வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரேமலதா விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணிக்குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "இன்னும் ஓரிரு நாளில் நல்ல அறிவிப்பை தருவோம். தேமுதிக யாருடன் கூட்டணி, எத்தனை சீட், எந்த தொகுதி என்பது குறித்த விவரம் அறிவிக்கப்படும். இன்றும், நாளையும் விருப்ப மனு வழங்கப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்கள்தான். வியாழக்கிழமை அனைத்து விவரங்களும் முறையாக அறிவிக்கப்படும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி