தேதி அறிவிப்புக்காக காத்திருக்காமல் களமிறங்கிய கட்சிகள்

1536பார்த்தது
தேதி அறிவிப்புக்காக காத்திருக்காமல் களமிறங்கிய கட்சிகள்
திண்டுக்கல் மக்களவை தொகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதி தவிர, திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. வேடசந்தூர் தொகுதி கரூர் மக்களவைத் தொகுதியில் சேர்ந்துள்ளது. திண்டுக்கல் தொகுதியில் திமுக, பா. ஜ. க. , நாம் தமிழர் கட்சிகள் தேர்தல் பணிகளை முன்பே தொடங்கி விட்டன.

திண்டுக்கல் தொகுதியில், திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து முதல் பொதுக் கூட்டத்தை நடத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த பொதுக்கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் பேசினார். கூட்டத்திற்கு ஏராளமான பொது மக்களை நிர்வாகிகள் திரட்டி அழைத்து வந்திருந்தனர். மேலும் வீடு வீடாகச் சென்று ஆட்சியின் நிறை, குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

பாஜகவினர் தேர்தல் அலுவலகத்தை, திண்டுக்கல்லில் திறந்து பணிகளை தொடங்கி விட்டனர். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக தேர்தல் அலுவலகங்களைத் திறக்க முடிவு செய்துள்ளனர். மேலும் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் விளக்கிக் கூறி வாக்கு சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு கட்சி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட நிரஞ்சனா என்பவரை நாம் தமிழர் கட்சி களம் இறக்கி உள்ளது. இதையடுத்து அக்கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு, வேட்பாளரை அறிமுகம் செய்து பணிகளைத் தொடங்கி விட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி