இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்கும் முயற்சி

561பார்த்தது
இயற்கை வேளாண்மையை மீட்டெடுக்கும் முயற்சி
வடமதுரை சுற்றுவட்டார பகுதியில் இயற்கை வேளாண்மையை மீட்டெடுத்து விவசாயத்தை காப்பாற்றுவதற்காக பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர் இசை நிறுவனத்தினர். தற்போதைய கால கட்டத்தில் நமது விளை நிலங்களில் விவசாய பணிகள் அதிகளவில் இயந்திரங்களை நம்பியே நடக்கிறது.

இவ்வாறான இயந்திர பயன்பாடு இல்லாத, அதிகரிக்காத காலத்தில் விவசாயம் முழுக்கவே கால்நடைகளை சார்ந்தே இருந்தது. கிணறுகளிலிருந்து நீர் எடுத்து நிலத்தில் பாய்ச்சுவது, உழவு என பல அத்தியாவசிய பணிகளும் மாடுகளை நம்பியே இருந்தது. கால்நடைகளின் கழிவுகள் அனைத்தும் மீண்டும் விளை நிலத்திற்கு உரமாக கிடைத்தது. இவை மண்ணிற்கும், மனிதர்களுக்கும் தீங்கு தராதவையாக இருந்ததால், உற்பத்தியாகும் விளை பொருட்கள் மூலம் கேடாகமல் இருந்தது.

இதனால் ரசாயன உரங்களுக்கு விவசாயிகள் அதிக பணம் செலவிட தேவையில்லாத நிலையும் இருந்தது. ஆனால் தற்போதைய கால கட்டத்தில் விளை நிலங்களில் இயந்திர பயன்பாடு அதிகரித்து மாடுகள் வளர்ப்பு குறைந்ததால் இயற்கை உரங்கள் கிடைக்காமல் ரசாயன உரங்களை நம்பியே விவசாயம் நடக்கிறது. இது ஒருபுறமிருக்க, ரசாயன உர பயன்பாடின்றி இயற்கை விவசாயத்திற்கென ஒரு தனி உலகம் உருவாகி வருகிறது. இவ்வாறு விளைவிக்கப்படும் பொருட்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி