வேலு நாச்சியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

580பார்த்தது
திண்டுக்கல் ஆர். எம். காலனியில் வேலு நாச்சியார் 294 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தியாவின் முதல் சுதந்திரப் போருக்கு திண்டுக்கல்லை மையமாக வைத்து போரிட்ட வீரமங்கை வேலு நாச்சியாரின் பிறந்தநாள் விழா புதன்கிழமையான இன்று காலை 11. 30 மணி அளவில் திண்டுக்கல் ஆர் எம் காலணியில் உள்ள ஒன்பதாவது கிராஸ் பகுதியில் வேலு நாச்சியார் பூங்கா வளாகத்தில் 294 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஐந்தாவது வார்டு மாமன்ற உறுப்பினர் வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர் சுவாதி ஜெயக்குமார் மற்றும் ஆறாவது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்வி குழு தலைவர் சரண்யா ஸ்ரீராம் கலந்து கொண்டு வீரமங்கை வேலு நாச்சியாரை பற்றி பேசினார். ஆங்கிலேய அடக்கு முறைக்கு எதிரான போரில் மைசூர் சுல்தான் ஹைதர்அலி , திப்பு சுல்தான் பேராதரவோடு, விருப்பாச்சி கோபால நாயக்கரின் துணையோடு தன் படையை திண்டுக்கலிருந்து வழிநடத்தி வரலாற்றில் முதன் முறையாக வெற்றி பெற்றவர். இதற்கு முதல் சுதந்திரப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே திண்டுக்கல் பிளான் என்று வைத்து ஆங்கிலேயரை நடுங்கச் செய்தவர். திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் ஆலயத்தில் காலை9 மணியளவில் பூசையும், அதைத் தொடர்ந்து 9ம் கிராஸ் ஆர். எம். காலனியில் உள்ள வேலு நாச்சியார் பூங்காவில் 11. 30 மணியளவில் மரியாதை செலுத்தப்பட்டது.

தொடர்புடைய செய்தி