குடிமனைப்பட்டா கோரி இஸ்லாமிய பெண்கள் முற்றுகை

571பார்த்தது
திண்டுக்கல்லில் குடிமனைப்பட்டா கோரி இஸ்லாமிய பெண்கள் மேற்கு தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாலபாரதி, பீமாராவ் ஆகியோர் கலந்து கொண்டனர். செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் திண்டுக்கல் மேற்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற இந்த காத்திருப்பு போராட்டத்திற்கு சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் திண்டுக்கல் தொகுதி எம்எல்ஏவுமான பாலபாரதி தலைமை வகித்தார்.

சங்கத்தின் மாநிலச்செயலாளரும் முன்னாள் சென்னை எம்எல்ஏவுமான பீமாராவ், கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். போராட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்டத் துணைத்தலைவர் அரபுமுகமது, மாவட்ட துணைச்செயலாளர் முகமது அனிபா, 13வது வார்டு சிபிஎம் ஒன்றியக்கவுன்சிலர் ஜீவாநந்தினி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் நகர்மன்ற கவுன்சிலர் நாகூரம்மாள் நன்றி கூறினார்.
போராட்டத்தையடுத்து மேற்கு வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். குடிமனைப்பட்டா கோரும் 350 பேர்களின் மனுக்கள் கொடுக்கப்பட்டது. மனுக்களை பெற்றுக்கொண்டார். விரைவில் இடம் தேர்வு செய்யப்பட்டு மனைப்பட்டா வழங்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து காத்திருக்கும் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி