தரமான அரசுப் பேருந்துகளை இயக்க கோரிக்கை

54பார்த்தது
தரமான அரசுப் பேருந்துகளை இயக்க கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு தரமான அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

வத்தலகுண்டுவிலிருந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடிக்கு திங்கள்கிழமை பிற்பகல் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. சித்தரேவு, பெரும்பாறை வழியாக சென்ற பேருந்து பட்லாங்காடு பகுதியில் பழுதாகி நின்றது. இதனால், இந்தப் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிட்டது. இதையடுத்து, வேறுவழியின்றி கூடுதல் கட்டணம் செலுத்தி தனியாா் வாகனங்களில் தாண்டிக்குடிக்குச் சென்றனா்.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளுக்கு தரமான அரசுப் பேருந்துகளை இயக்க வேண்டும். மழைக் காலத்தில் பல்வேறு பணிகளுக்காக திண்டுக்கல், வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று விட்டு, மீண்டும் வீடுகளுக்கு திரும்பும் போது, பெரும்பாலான நேரங்களில் பேருந்து பழுதாகி மலைச் சாலையிலேயே நின்றுவிடுகிறது. இதனால், மாற்று வாகனங்களுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, இந்தப் பகுதிகளில் நல்ல நிலையில் உள்ள அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனா்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி