இந்தியா கூட்டணி சார்பில் நடிகை ரோகிணி பிரச்சாரம்

85பார்த்தது
கொடைக்கானல் அண்ணாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்காக இந்தியா கூட்டணி சார்பாக நடிகை ரோகினி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான, இந்திய கூட்டணி சார்பாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தன் அவர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரக்கூட்டம் புதன்கிழமை காலை 11 மணியளவில் கொடைக்கானலில் அண்ணாநகர் பகுதியில் நடைபெற்றது. இதில் கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லதுரை மற்றும் துணை தலைவர் மாய கண்ணன் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளும், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

சிறப்பு விருந்தினராக நடிகை ரோகிணி சிறப்புரை ஆற்றினார் அப்பொழுது பாஜக அரசு அமலாக்கத்துறை அதிகாரிகளை கைக்குள் வைத்து மிகப்பெரிய சூழ்ச்சி செய்துள்ளார்கள். மிகப்பெரிய மருந்து நிறுவனங்கள் மீது பெரிய அளவிளான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது அவர்கள் விற்கும் மருந்து கலப்படம் ஆனது, என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டு அவர்களுக்கு தர சான்று தராத நிலைமை ஏற்பட்டதாகவும் பாஜக அரசுக்காக கோடிக்கணக்கான அளவில் எலக்ட்ரானிக் பாண்ட் வாங்கப்பட்டதன் பின் தரச் சான்று அளிக்கப்பட்டதாகவும் கூறினார். சிறுபான்மையினர் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகிறார்கள் எனவும் கூறி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சச்சிதானந்தனுக்கு வாக்கு சேகரித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி