நத்தம் அருகே பள்ளி மாணவி மாயம்

7116பார்த்தது
நத்தம் அருகே பள்ளி மாணவி மாயம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே நல்லூர் குரும்பபட்டியை சேர்ந்தவர் ராஜசேகரன் (50). இவரது மகள் ஜெயசுபா (19). இவர் அரவங்குறிச்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வீட்டில் இருந்தவரை காணவில்லை. தொடர்ந்து பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் தந்தை ராஜசேகரன் நத்தம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து காணாமல் போனவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி