நத்தத்தில் மாணவ - மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

65பார்த்தது
நத்தத்தில் மாணவ - மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
தமிழ் புத்தாண்டையொட்டி நத்தத்தில் இந்து வர்த்தகர்கள் பொது நலச் சங்கம் சார்பில் நத்தம் பகுதியில் உள்ள பள்ளிகளில் பள்ளி அளவில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். செயலாளர் வாசுதேவன், பொருளாளர் நகுலன், துணைத் தலைவர் பாலகுருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நத்தம் துரைக்கமலம் அரசு மாதிரி, அரசு பெண்கள், ஆர். சி மேல்நிலைப் பள்ளிகள், லாண்டீஸ், ராம்சன்ஸ், மீனாட்சி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் இரண்டு இடங்களில் மதிப்பெண் பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் கேடயங்களை வழங்கினர். முன்னதாக ஞாயிற்றுக்கிழமை காலையில் அசோக்நகர் பராசக்தி வணிக வளாகத்திலிருந்து சங்கத்தினர் மேளதாளம் முழங்க புறப்பட்டு நத்தம் மாரியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டியும், வியாபாரம் சிறக்க வேண்டியும் சிறப்பு பூஜைகள் செய்து அருட்பிரசாதம் பெற்று திரும்பினர். தொடர்ந்து காந்தி கலையரங்கில் நாதஸ்வரம், இன்னிசைக் கச்சேரி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி