நத்தம் அருகே புதிதாய் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் திறப்பு

584பார்த்தது
நத்தம் அருகே புதிதாய் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைகள் திறப்பு
நத்தம் தொகுதி செந்துறை அருகே பிள்ளையார்நத்தம் ஊராட்சி மாதவநாயக்கன்பட்டி, சரளைப்பட்டி அரசு ஆரம்ப பள்ளிகளில் எம். எல். ஏ. , மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட கட்டடங்கள் திறப்பு விழா நடந்தது.
அ. தி. மு. க. , முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திறந்து வைத்தார். செந்துறையில் நியாய விலைக்கடை பணிக்கான பூமிபூஜையையும் தொடங்கி வைத்தார்.
நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர். வி. என். கண்ணன், ஒன்றியறிய செயலாளர்கள் சின்னு, மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் சின்னாக்கவுண்டர், ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி