நத்தம்: நவ. 3ல் இலவச மணமாலை நிகழ்ச்சி

76பார்த்தது
நத்தம்: நவ. 3ல் இலவச மணமாலை நிகழ்ச்சி
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்க தலைவர் ராமச்சந்திரன், பொது செயலாளர் ரகுராம், பொருளாளர் ரவி, துணைத் தலைவர் குழந்தைவேலு கூறியதாவது: திண்டுக்கல் பி. எஸ். என். ஏ. , மஹாலில் நவ. 3ல் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் சார்பில் இலவச மணமாலை நிகழ்ச்சி நடக்கிறது.

திண்டுக்கல்லில் முதல் முறையாக நடக்கும் இந்நிகழ்ச்சி அன்று காலை 9: 00 மணி முதல் நடக்கிறது. கட்டணமில்லா இலவச சேவையான இதில் விரும்பும் வரன்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். மணமக்கள் பெற்றோர் சங்க உறுப்பினராக வேண்டும். இங்கு பதிவு செய்யப்படும் தகவல்கள் பத்திரமாக வைக்கப்படும். சிவன் 98402 21512, ஜெயக்குமார் 99947 44004 ல் பதிவு செய்யலாம். ஏற்பாடுகளை மாவட்ட தலைவர் வீரமணி, கவுரவத்தலைவர் சிவசண்முகராஜன், செயலாளர் ராஜேஸ்வரன், பொருளாளர் சின்னசாமி, துணைத்தலைவர் பழனிவேல்ராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் பாலசுப்பிரமணி, பரமசிவம், கோபிநாத், பிரகாஷ் செய்கின்றனர் என்றனர்.

தொடர்புடைய செய்தி