வேணுகோபால சுவாமி கோவிலில் வாராஹி அம்மன் பிரதிஷ்டை

73பார்த்தது
வேணுகோபால சுவாமி கோவிலில் வாராஹி அம்மன் பிரதிஷ்டை
திண்டுக்கல் மாவட்டம், நத்தம்- கோவில்பட்டியில் அக்ரஹாரத்தெருவில் அமைந்துள்ள பாமா ருக்மணி வேணுராஜகோபால சுவாமி கோயிலில் வாராஹி அம்மன் சிலை பிரதிஷ்டை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திங்கட்கிழமை மாலை யாகசாலைகள் அமைக்கப்பட்டு அனுக்ஞை, , மஹாபூர்ணாகுதி பூஜை, விக்னேஷ்வர பூஜை, கன்யா பூஜைகள் நடந்தது. தொடர்ந்து செவ்யாய்கிழமை காலை கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் கோயிலின் உள் பிரகாரத்தில் மஹாவாராஹி அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மஹாவாராஹி அம்மன் கைங்கர்யா சபா நிர்வாகிகள் செய்திருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி