நத்தம்: திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

1874பார்த்தது
நத்தம்: திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் - கோவில்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் நிலபர் (வயது 22). இவருக்கும், பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த மதன்குமார் என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவருடன் கோபித்து கொண்டு நத்தம் கோவில்பட்டியில் உள்ள தனது தந்தை வீட்டில் நிலபர் இருந்து வந்தார்.

கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறு உறவினர்கள் அறிவுரை கூறிவந்துள்ளனர். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நத்தம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த நத்தம் போலீஸார் இறந்த பெண்ணின் உடலை கைபற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் திருமணமாகி 6 மாதமே ஆவதால் திண்டுக்கல் கோட்டாட்சியர் சக்திவேல் நேரில் சென்று விசாரணை நடத்தினர். நத்தம் காவல் உதவி ஆய்வாளர் விஜயபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தொடர்புடைய செய்தி