திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று கிருத்திகை என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மேலும் மதியம் முதல் பழனி பகுதியில் கனமழையும் தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வந்ததால் வெளியூர் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். அதுமட்டுமின்றி பழனி பெரியநாயகி அம்மன் கோயில், வன்னி தோட்ட முருகன் கோயில் போன்ற இடங்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்