சிபிஎஸ்இ பள்ளியில் மாணவி சாதனை

75பார்த்தது
சிபிஎஸ்இ பள்ளியில் மாணவி சாதனை
திண்டுக்கல் வித்யா பார்த்தி நேஷனல் அகாடமி சிபிஎஸ்இ பள்ளி சாதனை படைத்துள்ளது.

துவங்கி சில ஆண்டுகள் ஆனாலும், மாணவ , மாணவிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். சி பி எஸ் இ பள்ளி பிளஸ் டூ தேர்வில் இந்த பள்ளி மாணவி எஸ். தாரிஹா 423 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பத்தாம் வகுப்பு சிபிஎஸ் இ பொதுத்தேர்வில் மாணவன் முகமது பைசல் 478 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவி எஸ். தாரிஹா தந்தை வழக்கறிஞர் கார்த்திகேயன், தாய் கார்த்திகை செல்வி கூறியதாவது: இந்த பள்ளியில் படிப்பதால் நல்ல ஒழுக்கம், நல்ல செயல்பாடு, நேரம் தவறாமை ஆகியவை என் மகளிடம் பார்க்க முடிகிறது.

என் மகளை ஐஏஎஸ், ஐபிஎஸ் படிக்க வைப்பது என் நோக்கம். அதற்கு இந்த பள்ளி பல உதவி செய்துள்ளது இவ்வாறு அவர்கள் கூறினார். அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை வித்யா பாத்தி பள்ளி குழுமத்தின் தலைவர் கே. கிருஷ்ணமூர்த்தி, அறங்காவலர் குழு உறுப்பினர் வித்யா விஸ்வநாதன், நிர்வாக அறங்காவலர் சரவணப் பொய்கை, சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் கல்யாணி ஆகியோர் பாராட்டினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி