சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

51பார்த்தது
சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. பொது மேலாளர் டேனியல் சாலமன் தலைமை வகித்து, ‘சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி ஒதுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்காகவும்,

ஒடுக்கப்பட்டவர்களுடைய சமத்துவத்திற்காகவும் வாழ்நாள் எல்லாம் குரல் கொடுத்து எளிய மக்களின் உரிமைகளை பற்றி விழிப்புணர்வை ஊட்டிய நம் அரசியல் அமைப்பு சட்டத்தை வகுத்து தந்த அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என்றும், சக மனிதர்களை சாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டேன் என்றும், சக மனிதர்களிடம் சமத்துவத்தை வாழ்நாள் முழுவதும் கடைபிடிப்பேன் என்றும் உளமாற உறுதி ஏற்கிறேன்’ என வாசிக்க அலுவலர்கள் பணியாளர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

தொடர்புடைய செய்தி