அறிமுகம் இல்லாத நம்பரில் இருந்து வீடியோ கால் வந்தால் எடுக்க வேண்டாம். அந்த நம்பர் பற்றி தெரிந்து கொண்டு அதன் பின்னர் தொடர்பு கொண்டு பேசலாம் என திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் மிகவும் ஹாட் சப்-ஜெக்ட் ஆக உருவாகி உள்ளது வீடியோகால் மோசடி. யாருடைய மொபைல் நம்பருக்காவது வீடியோ கால் வரும், அந்த நம்பரில் பேசுபவர் யார் என நமக்கு தெரியாது. நாம் மொபைல் போனை எடுத்ததும், ஒரு பெண் ஸ்கீரினில் தோன்றுவார். நாம் அவர் யார் என கேட்டு தெரிந்து கொள்ளும் முன்னர், மளமளவென உடைகளை கழட்டி விட்டு நிர்வாண போஸ் கொடுப்பார். இதனை நாம் உடனடியாக கட் செய்யும் முன்னர் நமது மொபைலில் உள்ள பிரண்ட் கேமரா மூலமே நமது முகத்தையும் படம் எடுத்து விடுவார்கள். அதாவது நாம் மொபைலில் ஆபாச படம் பார்ப்பது போல், நமது முகத்தையும், மொபைலையும் இணைத்து படம் பிடித்து விடுகின்றனர். இவ்வளவு வேலைகளையும் ஓரிரு நொடிகளில் முடித்து விடுகின்றனர்.
அடுத்து ஒரு நபர் திரையில் தோன்றுவார். உங்களை ஆபாசபடம் பார்ப்பது போல் படம் பிடித்து விட்டோம். உங்கள் முழு தகவல்களையும் சேகரித்து விட்டோம். ஓரிரு நொடிகளில் நீங்கள் ஆபாசபடம் பார்க்கும் வீடியோ உலகம் முழுவதும் பேஸ் புக் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவோம். இப்படி வெளியிடாமல் இருக்க வேண்டுமானால், நாங்கள் தரும் நம்பக்கு இவ்வளவு பணம் அனுப்புங்கள் என மிரட்டுகின்றனர்.