முன்பெல்லாம் 50 அல்லது 60 வயதினருக்கு வரும் சர்க்கரை நோய் தற்போது இளம் வயதினருக்கும் வருகிறது. குறிப்பாக இந்த நோய் 20 - 30 வயது இளைஞர்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இன்னும் சிலருக்கு குழந்தை பருவத்தில் வரக்கூடிய டைப் 1 வகை சர்க்கரை நோய் வருகிறது. முறையான உடற்பயிற்சியின்மை, வேலைப்பளு காரணமாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல், சரியான தூக்கமின்மை, துரித உணவுகள் போன்றவை சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.